Tuesday, 23 September 2014

வங்கித் தேர்வுகள்: பயிற்சி...பயிற்சி...பயிற்சி

வங்கித் தேர்வுகள்: பயிற்சி...பயிற்சி...பயிற்சி

வங்கி அதிகாரி பணி தேர்வுக்கான அடிப்படை பாடத்திட்டங்களைக் கடந்த வாரம் பார்த்தோம். எழுத்துத்தேர்வில் கணிதம் (குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட்), பகுத்தாராயும் திறன் (ரீசனிங்) ஆகிய இரு பிரிவுகள்
முக்கியமானவை.

காரணம் ஒவ்வொன்றிலும் தலா 50 வினாக்கள் கேட்கப்பட்டு, தலா 50 மதிப்பெண் வீதம் மொத்தம் 100 மதிப்பெண்கள் இருக்கின்றன. எனவே, எழுத்துத்தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் இந்த இரு பகுதிகளின் வசம் இருக்கின்றன. இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் இந்த வாரத்தில் கணிதத்திறன் தேர்வு குறித்து பார்க்கலாம்.

பள்ளிக் கணக்குகள்

“குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட்” என ஐ.பி.பி.எஸ். வங்கி அதிகாரி தேர்விலும், “டேட்டா அனலைசிஸ் இன்டர் பிரட்டேஷன்” எனப் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி தேர்விலும் கணிதத்திறன் அழைக்கப்படுகிறது. பள்ளிப் படிப்பு அளவிலான அடிப்படை கணிதக் கேள்விகள் மற்றும் தரவுகள், அட்டவணைகளில் உள்ள விவரங்களைப் படித்துப் புரிந்துகொண்டு விடையளிக்கக்கூடிய வினாக்கள் இதில் இடம்பெறும்.

அடிப்படையில் பார்த்தால் போட்டியாளரின் கணிதத்திறமையைச் சோதிக்கும் வகையில் கேள்விகள் அமைந்திருக்கும். பள்ளியில் படிக்கும்போது அரித்மேட்டிக், அல்ஜீப்ரா உள்ளிட்ட அடிப்படைக் கணிதங்களைப் படித்திருப்போம். 10-ம் வகுப்புக்குப் பிறகு கணிதம் தொடர்பு இல்லாத பிரிவுகளில் சேரும் மாணவர்களும், பிளஸ் டூ- க்குப் பிறகு கணிதத்தை முக்கியப் பாடமாகவோ அல்லது துணைப்பாடமாகவோப் படிக்காதவர்களும் பள்ளியில் படித்த கணக்குப் பாடங்களை மறந்திருக்கக்கூடும். தற்போது வங்கித்தேர்வுக்குத் தயாராகும்போது மீண்டும் அவற்றை நினைவில் கொண்டுவர வேண்டும்.

கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், பின்னம், வர்க்கம், வர்க்க மூலம், கணம், நிகழ்தகவு, சராசரி, விகித்தாசாரம், அசல், வட்டி, தனி வட்டி,கூட்டு வட்டி லாப-நஷ்டக் கணக்கு, நேரம்-தூரம், நேரம்-வேலை எனப் பள்ளி அளவிலான கணக்குகளே கணிதப் பகுதியில் கேட்கப்படுகின்றன.

நேர மேலாண்மை

கணக்கில் ஒவ்வொரு வருக்கும் குறிப்பிட்ட சில பகுதிகள் நன்கு பிடிக்கலாம். நமக்குப் பிடித்தமான அத்தகைய பிரிவுகளில் கேட்கப்படும் வினாக்களுக்குக் கடகடவெனப் பதிலளித்துவிடுவது நல்லது. எல்லா வினாக்களுக்கும் விடையளித்துவிட வேண்டும் என நினைக்கக் கூடாது. நேர மேலாண்மை மிகவும் முக்கியம்.

மேலும், கணிதத்திறன் பகுதியில், அட்டவணைகள், தரவுகள் (டேட்டா), வரைபடங்கள் (சார்ட்டு) கொடுக்கப்பட்டு அதில் இருந்தும் கேட்கப்படும் வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். ஒரே பகுதியில் இருந்து ஐந்தாறு கேள்விகள் தொகுப்பாகக் கேட்கப்படுவதால், கொடுக்கப்படும் தகவல்களைப் புரிந்துகொண்டால் அனைத்துக் கேள்விகளுக்கும் எளிதில் பதில் அளித்துவிடலாம்.

இந்தப் பகுதியில், படித்து அடிப்படை விஷயத்தைப் புரிந்துகொள்ளச் சற்று நேரம் பிடிக்கலாம். எனவே, விடையளிக்கும்போது துல்லியமும், வேகமும் அவசியம். அடிப்படை கணித அறிவு, இந்தப் பகுதி வினாக்களுக்கு விரைவாக விடையளிக்க உதவும். அதேபோல், “ஆட்-மேன் அவுட்” என்ற பகுதியில் கொடுக்கப்பட்ட கேள்விகளில் வித்தியாசமானது, மற்றவற்றுடன் தொடர்பு இல்லாதது எது? என்பதைக் கண்டறியும் கேள்விகளும், கொடுக்கப்பட்டுள்ள தொடரின் அடுத்தது எது? என்பதைக் கண்டுபிடிக்கும் வினாக்களும் கணிதத்திறன் பகுதியில் இடம்பெறுகின்றன.

இதற்கும் அடிப்படைக் கணித அறிவு பெரிதும் கைகொடுக்கும். ஒரு கேள்விக்கு விடைதெரியவில்லை என்றால் அதிலேயே முட்டி மோதிக் கொண்டிருக்கக்கூடாது. உடனடியாக அடுத்த கேள்விக்குச் சென்றுவிட வேண்டும். மற்ற வினாக்களுக்கு விடையளித்துவிட்டு அடுத்த ரவுண்டில், விடுபட்ட கேள்வி களுக்கு விடையளிக்க முயலலாம்.

பயிற்சி

கணிதத்திறன் பகுதியைப் பொறுத்தவரையில், எந்த அளவுக்குக் கேள்விகளுக்கு விடையளித்துப் பயிற்சி

எடுக்கிறீர் களோ, அந்த அளவுக்கு அதில் நிபுணத்துவம் பெற்றுவிடலாம். கேள்விகளுக்கு விடைகளை கண்டுபிடிப்பதைக் காட்டிலும், விடையளித்த விதத்தை மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். கேள்விகளுக்கு விடையளித்துப் பயிற்சிபெறும் போதுதான், துல்லியமும், வேகமும் தெரிய வரும். எனவே, பயிற்சி... பயிற்சி... பயிற்சி...என்ற தாரக மந்திரத்தை மனதில்வைத்து கணித கேள்விகளுக்கு விடையளித்துப் பயிற்சி செய்யுங்கள். கணிதத் திறன் பகுதியில் கணிசமான மதிப்பெண் பெற்றுவிடலாம். ரீசனிங் எனப்படும் பகுத்தாராயும் திறன் வினாக்கள் குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.

ஆங்கிலத்தில் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்

ஆங்கிலத்தில் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்

மெட்ரிக் பள்ளிக்கு இணையாக, கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவியர், வகுப்பறையில்ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடல் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி பஞ்.,- சாமிநாதபுரம் புதூரில் யூனியன் நடுநிலை பள்ளி செயல்படுகிறது. 260 பேர் பயில்கின்றனர்.

கிராமப்புற பள்ளி என்பதால், பெரும்பாலும் விவசாய கூலிகள், தொழிலாளர்களின் குழந்தைகளே, இங்கு படிக்கின்றனர்.ஒன்று, இரண்டாம் வகுப்பு ஆங்கில மீடியத்தில் தலா, 30 பேரும், ஆறு முதல், எட்டு வகுப்பு வரை, 117 பேர் படிக்கின்றனர். ஆறாம் வகுப்பில் தமிழ், ஆங்கில மீடியம் உள்ளன. ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரின் வகுப்பறை உரையாடல் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.தமிழில் பேச துவங்கினால், சக மாணவ, மாணவியரே, ஆசிரியரிடம் காட்டி கொடுத்து விடுகின்றனர். நன்கு கற்றுணர வேண்டும் என்ற நோக்கில் பேச்சு, எழுத்து, படிப்பதில், அனைத்துமே ஆங்கிலத்தில் மேற்கொள்கின்றனர்.இதுகுறித்து, பள்ளி ஆங்கில ஆசிரியை செல்வி மணியம்மை கூறியதாவது:மெட்ரிக் பள்ளிக்கு இணையாக, அரசு பள்ளி, மாணவ, மாணவியர் ஆங்கிலம் பேச வைத்துள்ளோம். ஆங்கில அறிவை மேம்படுத்த வேண்டும்.

அரசு பள்ளிகளிலும் சிறப்பாக கற்பிக்க இயலும்என்பதை, வெளிகாட்டும் விதமான முயற்சி இதுவாகும்.தற்போது படிப்பது, எழுதுவது, பேசுவது, புரிந்து கொள்வது மட்டுமின்றி, ஆசிரியர்கள், சக மாணவ, மாணவியருடன் உரையாடுகின்றனர். துவக்கத்தில் தான், ஆங்கிலம் குறித்த தயக்கம் இருந்தது. மெல்ல,மெல்ல ஓரிரு வார்த்தைகளாக பேச, எழுத, படிக்க துவங்கினர். 2012 முதல் ஆங்கிலம் பிரதானமாக்கப்பட்டது.இதனால், மாணவர்களிடையே பீதி, தயக்கம் இருந்தது. ஒவ்வொரு மாணவருக்கும் சிறப்பு கவனம் செலுத்தியதால், அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தினமும், உணவு இடைவேளையின் போது, 20 நிமிடம், வகுப்பறையில் தினமும், 10 நிமிடம் ஆங்கிலத்தில் உரையாடுவது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் குறிப்பிட்ட நாட்களே, ஆங்கில வகுப்புகள் உள்ளன. அவற்றில் முழுமையாக ஆங்கில உச்சரிப்பு மட்டுமே இருக்க வேண்டும் என்பது, துவக்கத்தில் கடைபிடிக்கப்பட்டது. தற்போது மாணவர்களே அதை நடைமுறையாக்கி கொண்டுள்ளனர்.பதில் அளிக்க தெரியாவிடில், ஆசிரியர்களிடமே விளக்கம் கேட்கின்றனர். ஓரிரு முறை சொல்லி கொடுக்கும் பட்சத்தில், பழக்கி கொள்கின்றனர். ஓரிரு வார்த்தைகள் பேசுபவர், சிறு கதைகள், மொழி பெயர்ப்பு அளிக்கப்படுகிறது. எளிதான வாக்கியம் அடங்கிய கதை புத்தகங்கள், எஸ்.எஸ்.ஏ., சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதற்காக பள்ளியில், "இங்கிலீஷ் லிட்டரரி கிளப்', 2012ல் துவக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கிளப் கூடும். அப்போது நாடகம், பாட்டு, பேச்சு, சிறு உரையாடல்களை ஆங்கிலத்தில் மாணவர்கள் மேற்கொள்கின்றனர். ஒன்றாம் முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கிளப் உறுப்பினர்களாக உள்ளனர்.ஆங்கில பயன்பாடு காரணமாக பயம் நீங்கியுள்ளது. மாறாக ஆங்கிலத்தில் உரையாடுவதை மாணவர்கள் பழக்கப்படுத்தி கொண்டுள்ளனர். கிளப் நிகழ்ச்சிகளில் ஆங்கில திறனை வெளி காட்டலாம் என்ற தன் நம்பிக்கை அவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

80 சதவீத மாணவர்கள் கிளப் உறுப்பினராக உள்ளனர்.கிளப்பில் கதை, கவிதை, கட்டுரைபோட்டி ஆங்கில பயன்பாட்டுக்கு உதவிடுவதாக அமைந்துள்ளது, என்றார்.தனியார் பள்ளிகளுக்கு இணையாக, கிராமப்புற அரசு பள்ளியிலும் மாணவ, மாணவியர் ஆங்கிலத்தில் உரையாட மேற்கொண்டுள்ள முயற்சி, பெற்றோரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Monday, 18 August 2014

தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்தும் தமிழக முதல்வரின் உன்னத திட்டங்கள்


தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்தும் தமிழக முதல்வரின் உன்னத திட்டங்கள்: தமிழக முதல்வரின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியதாவது:–தமிழக முதல்வர் கல்வி ஒன்றே நிலையான செல்வம் என்பதை அறிந்து இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கென இந்நிதியாண்டில் ரூபாய் 17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை புரிந்துள்ளார். இது அரசின் வேறு எந்த துறைக்கும் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து இத்தைகைய நிதியை ஒதுக்கி மாணவ, மாணவிகளுக்கு பயன்தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழக முதல்வரின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கல்வியின் தரம் உயர்ந்து வருகிறது. முதல்வரின் நடவடிக்கைகளால் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகள் தரம் உயர்ந்தும் பாதுகாப்பான முறையிலும் செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் இதுபோன்ற பல்வேறு அரசின் நலத்திட்டங்களால் தமிழகம் ஒவ்வொரு நாளும் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது:– மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தில் 12–ம் வகுப்பு பயின்ற 16.16 லட்சம் மாணவ–மாண வியர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 1,637.78 கோடி செலவில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப் பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் பயிலும் மாணவ–மாணவியர்களுக்கு கல்வி கற்க உதவும் அனைத்து உபகரணங்கள், சீருடைகள் போன்றவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கல்வி தேர்ச்சி விகிதம் மற்றும் கல்வியின் தரம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

திறனை தக்கவைத்து கொள்வதே முழுமையான வெற்றி


திறனை தக்கவைத்து கொள்வதே முழுமையான வெற்றி விளையாட்டு துறையில், ஒவ்வொரு மாணவரின் விடா முயற்சியும், தன்னம்பிக்கையுமே, லட்சிய பாதையை நோக்கிய பயணத்துக்கு வழிவகுக்கும். ஒரு போட்டியில், வெற்றி பெறுவது என்பது எளிதான ஒன்று. ஆனால், அந்த திறனை தக்கவைத்து கொள்வதே முழுமையான வெற்றி என, தடகள வீராங்கனை ஸ்மிதா கூறுகிறார். இவர், அதிவிரைவுப்படை பெண்கள் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். தடகள வீரங்கனையான ஸ்மிதா, 36, கேரள மாநிலத்தை சேர்ந்தவர். லட்சியத்தை அடைவதற்கான முயற்சியை தனது, 10 வயதிலிருந்து மேற்கொண்டார். வாழ்க்கை பயணத்தில், முதலில் 100, 200 மீட்டரில் துவங்கி, படிப்படியாக தனது விடா பயிற்சியின் மூலம், ஆரம்பகாலத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டார். முதலில், பள்ளிகளுக்கிடையேயான தடகளம், மாவட்டம், மாநில அளவில், 100 மீட்டரில் கலந்து சான்றிதழ்களும், பரிசும் வென்றுள்ளார். அடுத்தடுத்து, அகில இந்திய போலீஸ் தடகள போட்டிகளில் கலந்து தங்கம் வென்றார். கல்லுாரி படிப்பை முடித்த பின், 1998ல் அதிவிரைவு படையில் சேர்ந்தார். 2003ல் அகில இந்திய போலீஸ் தடகள போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும், 2004ல் நடந்த போட்டியில், 3வது இடமும் பிடித்துள்ளார். 2008ல், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்த தேசிய அளவிலான சீனியர் தடகள போட்டியில், 100, 200, 400, 1500 மீ., ஓட்டங்களில், 4 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். அத்லெட்டிக் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் நடந்த தேசிய அளவிலான 400 மீட்டர் ஓட்டபந்தயத்தில், வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இப்படி பல பரிசுகளையும், பதக்கங்களையும் பெற்று வந்த இவர், தற்போது கோவையில் நடந்த அதிவிரைவு படை வீரர்களுக்காக தடகள போட்டியில் ஓவர் ஆல் சாம்பியன் பட்டத்தையும் பெற்று, வெற்றி கொடி நாட்டியுள்ளார். தடகள வீராங்கனை ஸ்மிதா கூறுகையில், "விளையாட்டை பொறுத்த வரையில், பயிற்சிக்கு விளையாட்டு மைதானம்தான் வேண்டும் என இல்லை. வீட்டு தெருக்கள்தான் ஓட்டப் பந்தயத்திற்கான முதல் அடித்தளம், நாள்தோறும் செய்யும் செயல்களில்தான், ஆரம்பகால பயிற்சி அமைகிறது. அதன்பின் எடுக்கும் முறையான பயிற்சியும், விடாமுயற்சியுமே வெற்றிக்கு வழிவகுக்கும். வெற்றி பெறுவது எளிது; வெற்றியை தக்க வைத்து கொள்வதே முழுமையான வெற்றி" என்றார்.

Saturday, 9 August 2014

1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம்


1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம் SSTA at TNSSTA-இடைநிலை(மாநில) பதிவுமூப்பு ஆசிரியர்கள்இயக்கம் - 1 hour ago தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் 150 அரசு பள்ளிகளுக்கு தேவையான 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம் உள்ளதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நடப்பு கல்வியாண்டில் (2014-15) ஒவ்வொரு மாவட்டத்திலும் தரம் உயர்த்துவதற்கு தகுதியான அரசு உயர்,மேல்நிலை பள்ளிகளின் பட்டியல்களை மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள் தயாரித்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியது. இந்த பட்டியலின் அடிப்படையில் 100 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாகவும், 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும் என, சட்ட சபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட... more » 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம் SSTA at TNSSTA-இடைநிலை(மாநில) பதிவுமூப்பு ஆசிரியர்கள்இயக்கம் - 1 hour ago தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் 150 அரசு பள்ளிகளுக்கு தேவையான 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம் உள்ளதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நடப்பு கல்வியாண்டில் (2014-15) ஒவ்வொரு மாவட்டத்திலும் தரம் உயர்த்துவதற்கு தகுதியான அரசு உயர்,மேல்நிலை பள்ளிகளின் பட்டியல்களை மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள் தயாரித்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியது. இந்த பட்டியலின் அடிப்படையில் 100 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாகவும், 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும் என, சட்ட சபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட... more » 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம் SSTA at TNSSTA-இடைநிலை(மாநில) பதிவுமூப்பு ஆசிரியர்கள்இயக்கம் - 1 hour ago தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் 150 அரசு பள்ளிகளுக்கு தேவையான 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம் உள்ளதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நடப்பு கல்வியாண்டில் (2014-15) ஒவ்வொரு மாவட்டத்திலும் தரம் உயர்த்துவதற்கு தகுதியான அரசு உயர்,மேல்நிலை பள்ளிகளின் பட்டியல்களை மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள் தயாரித்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியது. இந்த பட்டியலின் அடிப்படையில் 100 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாகவும், 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும் என, சட்ட சபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட... more » 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம் SSTA at TNSSTA-இடைநிலை(மாநில) பதிவுமூப்பு ஆசிரியர்கள்இயக்கம் - 1 hour ago தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் 150 அரசு பள்ளிகளுக்கு தேவையான 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம் உள்ளதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நடப்பு கல்வியாண்டில் (2014-15) ஒவ்வொரு மாவட்டத்திலும் தரம் உயர்த்துவதற்கு தகுதியான அரசு உயர்,மேல்நிலை பள்ளிகளின் பட்டியல்களை மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள் தயாரித்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியது. இந்த பட்டியலின் அடிப்படையில் 100 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாகவும், 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும் என, சட்ட சபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட... more »

Thursday, 7 August 2014


மிகவும் பாதுகாப்பான EMAIL தரும் தளம்


இமெயில் தரும் தளங்களில் ஒன்றான GMX என அழைக்கப்படும் தளம் மிகவும் பாதுகாப்பானதாக கூறப்படுகிறது. ஸ்பேம் மெயில்கள் நன்றாக வடிகட்டப்படுவதாக இந்த தளம் தெரிவிக்கிறது. இணையத்தளம் வழியாக மட்டுமின்றி பி.ஒ.பி. அல்லது ஐமேப் வழியாகவும் உங்கள் இமெயில் களை கையாளலாம். ஒன்லைனில் நமக்கு வந்த கடிதங்கள் மற்றும் அதனுடன் இணைந்து வந்த பைல்களை பாதுகாப்பாக வைத்திட 5 ஜிபி இடம் தரப்படுகிறது. மெசெஜ்கள் 50 எம்.பி., வரை அனு மதிக்கப்படுகின்றன. ஜி.எம்.எஸ் மெயில் மூலமாக உங்கள் பிற இமெயில் அக்கவுண்ட்களிலிருந்தும் (யாஹூ, லைவ் ஹாட் மெயில் உட்பட) இமெயில்களை பெறலாம். அனைத்து மெயில்களும் ஸ்பேம் மெயில்களுக்கான பில்டர்கள் மூலமே வருவதால் அத்தகைய மெயில்கள் தவிர்க்கப்படுகின்றன. இதனால், இன் பக்ஸ்கள் சுத்தமாக இருக்கின்றன. நம்மால் இமெயில்களை பார்வையிட முடியாத நிலையில் தானாக வெகேஷன் ரிப்ளை அனுப்பும் வசதி இதில் உண்டு. அட்ரஸ்புக்குடன் கலண்டர் ஒன்றும் ஜி.எம்.எக்ஸ்., மெயில் பக்ஸில் உண்டு. மெயில்களை பிரித்து வைக்க போல்டர் வசதியும் தரப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் எந்த போல்டரிலிருந்தும் மெயில்களை அழிக்கலாம். தற்போது இந்த இமெயில் சேவையினை உலகளவில் ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். புதியதாக இமெயில் பயன்படுத்த விரும்புபவர் களும், புதிய இமெயில் சேவை ஒன்றைக் கூடுதலாக பயன்படுத்த திட்டமிடுபவர் களும் இந்த சேவையினை பெறலாம்.இதற்கு எந்த கட்டணமும் கிடையாது.